சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வல்லிக்கண்ணன்-அம்மு தம்பதியினர். இவர்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் எட்டு குழந்தைகள் உள்பட அனைவரும் சேர்ந்து நேற்று (டிச. 14) பொதுமக்கள் சுற்றுலாத் தலமான பழவேற்காடு கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வழிப்பறிக் கொள்ளையர்கள் நான்கு பேர் குடிபோதையில் வல்லிக்கண்ணு-அம்மு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட ஆண்களை அவர்கள் தாக்கியுள்ளனர். இதைக்கண்ட பெண்கள் கூச்சலிடவே பெண்கள், குழந்தைகள் எனப் பாராமல் அனைவரையும் கடுமையாகத் தாக்கி, பின்னர் அவர்களிடமிருந்து மூன்று பவுன் தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் பலத்த காயமடைந்த குழந்தைகள் உள்பட அனைவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் உரிய காவல் பாதுகாப்பு இல்லாததாலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும், கொள்ளையர்கள் துணிகரச் செயலில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். எனவே இப்பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் நிலைய வளாகம் முன்பு தீக்குளிப்பு: மதுபோதையால் நேர்ந்த விபரீதம்!