சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி உணவகத்தில் வேலை செய்துவந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது வீட்டைச் சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியை அந்த ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
இது குறித்து பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் பாலாயோகி பேசுகையில், "கரோனா தொற்று பாதிப்படைந்த இளைஞர், திருவள்ளூரில் உள்ள தனது வீட்டிற்கு வாரம் ஒருமுறை மட்டுமே வருவார். இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளித்துள்ளோம்.
இந்த ஊராட்சியில் அனைத்து தெருக்களையும் முடக்கியுள்ளோம். வெளியாள்கள் உள்ளே வருவதற்கு தடைவிதித்து தடுப்புகள் அமைத்துள்ளோம். மேலும், தொற்றுப் பாதிப்படைந்த இளைஞரின் வீடு அமைந்துள்ள பகுதியல் உள்ள மக்கள் வெளியே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காற்றில் பறந்த 144 - இயல்புநிலைக்குத் திரும்பியது போல் உள்ள திருவாரூர்