ETV Bharat / state

திருவள்ளூரில் மளிகை வியாபாரி வீட்டு கார் மாயம்: காவல்துறையினர் விசாரணை! - Thiruvallur Latest News

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த வாகனம் மாயமான நிலையில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thiruvallur vehicle theft
Thiruvallur vehicle theft
author img

By

Published : Sep 5, 2020, 10:12 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மளிகை வியாபாரி பாஸ்கர். மளிகை, காய்கறி மொத்த வியாபாரியான இவர் சென்னையில் இருந்து மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்க மஹிந்திரா பொலிரோ வாகனத்தை சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.4)பாஸ்கரின் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த வாகனம் திடீரென மாயமானது. இதையடுத்து கடத்தப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி, கும்மிடிபூண்டி காவல்நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான வாகனத்தை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.