ETV Bharat / state

மாணவியிடம் முதியவர் சில்மிஷம்;உறவினர்கள் தட்டிக்கேட்டதில் உயிரிழப்பு - 3 பேர் கைது! - Thiruvallur

பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை மாணவியின் குடும்பத்தினர் தாக்கியதில் முதியவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாணவியின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 4, 2022, 3:00 PM IST

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, 17 வயது பள்ளி மாணவியிடம் ஸ்டீபன் (51) என்ற முதியவர் தவறாக நடந்துள்ளார். இதனை மாணவி தன்னுடைய பெற்றோர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவி கொடுத்த தகவலின் பேரில் மாணவியின் தந்தை மற்றும் உறவினர் உள்ளிட்ட 3 பேர் ஆட்டோவில் வந்து, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஸ்டீபன் என்பவரை சரிமாரியாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஸ்டீபன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

பின்பு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று (ஆக.4) ஸ்டீபன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவியின் தந்தை உள்ளிட்ட 3 பேரையும் மணவாளநகர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சோகத்தில் முடிந்த ஸ்கேட்டிங் பயணம்..! லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.