ETV Bharat / state

செங்குன்றத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருவள்ளூர்: செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் 16 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வட்டாரப்போக்குவரத்து அலுவலர்
author img

By

Published : May 22, 2019, 1:14 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பொன்னேரி பகுதிகளுக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தரம் குறித்து அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோன்று கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் வேன், பஸ் என மொத்தம் 300 வாகனங்கள் உள்ளன. செங்குன்றம் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் சசி தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை நடைபெற்றது. இந்த ஆய்வில், பொன்னேரி கல்வி அலுவலர் சாம்பசிவம், கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், அவசரகால கதவு ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுப்பணி மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Intro:செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களிலும் முதலுதவி பெட்டி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல் அவசரகால கதவு ஜன்னல்கள் தீயணைப்பு கருவிகள் புத்தகப்பை உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு பள்ளி விடுமுறை காலங்களில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் தரம் குறித்து ஆய்வு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. பொன்னேரி கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் வேன் பஸ் என மொத்தம் 300 வாகனங்கள் உள்ளன. செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி தலைமையில் இன்று தனியார் பள்ளி மைதானத்தில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. பொன்னேரி கல்வி அலுவலர் சாம்பசிவம் கும்மிடிபூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல் அவசரகால கதவு ஜன்னல்கள் தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டனர் மேலும் இப்பணி வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.