ETV Bharat / state

’சென்னையை விட திருவள்ளூரில் காற்று மாசு குறைவாக உள்ளது’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

திருவள்ளூர்: சென்னையை விட திருவள்ளூரில் காற்று மாசு குறைவாக உள்ளதென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

mafa Pandiyarajan
author img

By

Published : Nov 13, 2019, 12:12 AM IST

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திறந்தவெளி கட்டண நிதியின் கீழ் பாரதி நகர், பாலகிருஷ்ணன் நகர், நியூ சென்னை மெட்ரோ சிட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு பூங்காக்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

பூங்காக்களின் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நான்கு பூங்காக்களையும் திறந்து வைத்தார்.

பூங்காக்களை திறந்து வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், "திருவள்ளூர் மாவட்டத்தில் காற்று மாசை பெருமளவு அரசு கட்டுப்படுத்தி வருகிறது. டெல்லி, சென்னை போன்ற பகுதிகளில் உள்ள காற்று மாசை விட இங்கு குறைவான அளவில்தான் உள்ளது. நீர் மாசு மட்டுமே இங்கு உள்ளது. அதனை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை வரவேற்கிறேன் என்றும், உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து முடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாட்டுச் சாணத்தில் அழகு சாதனப் பொருள்கள்: அசத்தும் பட்டதாரி இளைஞர்!

Intro:உள்ளாட்சி தேர்தல் வேலைகளை தமிழக அரசு சிறப்பாக செய்துமுடிக்கும் என திருவேற்காட்டில் புதிய பூங்காவை திறந்துவைத்தபின் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டிBody:திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திறந்தவெளி கட்டண நிதியின்கீழ் பாரதிநகர், பாலகிருஷ்ணன் நகர், நியூ சென்னை மெட்ரோ சிட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் 4 பூங்காக்கள் கட்டும் பணி நடந்து வந்தது பூங்காக்களின் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு பூங்காக்களை திறந்து வைத்தார் .Conclusion:பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் காற்று மாசு என்பதை பெருமளவு கட்டுப்படுத்தி வருகின்றனர்.டெல்லி சென்னை போன்ற பகுதிகளில் இருக்கும் காற்று மாசு அளவை விட இங்கு குறைவான அளவில் உள்ளது.நீர் மாசு மட்டுமே உள்ளது அதனை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை வரவேற்கிறேன்,உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு முழுவதும் சிறப்பாக செய்து முடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.