திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் வியாபாரி ஒருவரிடமும்; செங்கல் சூளை நடத்தி வந்த வரதராஜுலு என்பவரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தைப் பறித்த வழக்குகளில் மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வீரா என்பவரை வெள்ளவேடு காவல் துறையினர் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து இவரிடம் காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வீரா வெள்ளவேடு பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் தொடர்ந்து வீராவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வரதட்சணைக்காக மனைவியைக் கொலைசெய்த கணவன்!