திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள இந்திரா நகரில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமரைக்குளம் அமைந்துள்ளது இந்தக் குளத்தில் இருந்து தான் பகுதி முழுவதிற்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் குளம் பழடைந்துள்ளது. இதனால் பகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதை போக்கும் வகையில் அந்தப் பகுதியில் வசிக்கும் அரவிந்தன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை இணைத்து குளத்தை சீர் செய்தனர். இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பராட்டியுள்ளனர்.
இதையும் படிக்க: மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!