திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி சாலை இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜெயா. இருவருக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை. மேலும் ஜெயா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் சிகிச்சைக்காக மனோகரன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை 11 மணி அளவில் உயிரிழந்தார். ஆனால் மாலை 6 மணி வரை மருத்துவமனை நிர்வாகம் ஜெயாவின் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் சவக்கிடங்கில் கிடப்பில் போட்டுவைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயாவின் உறவினர்களும் அவர் வசிக்கும் தெரு மக்களும் திருத்தணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இது குறித்த தகவலறிந்த திருத்தணி காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்துவந்து போராட்டம் செய்தவர்களிடம் சமரசம் பேசி உடனடியாக உடலைத் தருவதாக உறுதி கூறியபின் அவர்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிஙக்: கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி!