திருவள்ளூர்: திருநின்றவூர் அருகே நடுகுத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரின் மனைவி கனிமொழியுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல் தெரிந்து மதன் பலமுறை செந்திலை எச்சரித்தும் தொடர்ந்து தொடர்பைத் துண்டிக்காமலிருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் அவனது கூட்டாளிகளுடன் செந்திலைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த செந்திலை வழிமறித்து மதன் மற்றும் அவரது கூட்டாளிகளான அருண் பாபு, ரியாஸ் உள்பட மூவர் சேர்ந்து செந்திலின் தலை, முகம், கை, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியோடினர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செந்திலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, செந்தில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து திருநின்றவூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மூவரைத் தேடி வருகின்றனர்.
தகாத உறவு விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரைச் சரமாரியாக வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Covid cases in India: நாட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு