திருநின்றவூரில் தனியார் அசைவ உணவகம் ஒன்று இயங்கிவருகிறது. அங்கு உணவருந்த சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சிக்கனில் புழுக்கள் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உணவக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், உணவக நிர்வாகம் உரிய பதிலளிக்காமல் வேறு உணவு தருவதாக கூறியுள்ளனர். உடனே அந்நபர் சிக்கனில் புழு இருந்ததை படம்பிடித்து, உணவுப் பாதுகாப்புத் துறையில் புகாரளித்துள்ளார். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
இதனிடையே உணவக நிர்வாகத்தினர் சிக்கன் வாங்கிய கடை மீதுதான் தவறு; உணவகத்தின் மீது எந்த தவறுமில்லை எனக் கூறி சிக்கன் கடை மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர்