திருவெங்கடபுரம் கிராமத்தில் வசித்துவரும் சத்தியமூர்த்தி என்பவர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் தமது சொந்த வேலை காரணமாக வீட்டைப் பூட்டி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 18 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் பொன்னேரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறிவருவதால் காவலர்கள் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இதுபோன்ற கொள்ளைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
காவல் உதவி ஆய்வாளர் வீட்டிலேயே பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நூறு நாள் வேலை திட்டத்தில் இவ்வளவு கோடி ஊழலா? பகீர் தகவல்கள்!