அடர் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரம் சதுர அடியில் 105 மரங்கள் நடும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பயிற்சி காவலர்களாக இருக்கும் 105 காவலர்களை கொண்டு இந்த மரக்கன்றுகளை நட செய்தனர்.
இனி வரும் காலங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், பள்ளி , கல்லூரிகளில் என்.ஜி.ஓ ஒத்துழைப்புடன் மரங்கள் நடவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் நாட்டு மரங்கள், அத்தி மரம், உள்ளிட்ட மரங்கள் நடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி தில்லை நடராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .