ETV Bharat / state

சமூகத்தில் அந்தஸ்தைப் பெற உழைக்கும் திருவள்ளூர் பெண்களின் கதை!

author img

By

Published : Mar 8, 2020, 9:17 AM IST

Updated : Mar 8, 2020, 2:57 PM IST

உரிமைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பெண்கள் பலர் கல்வியின் அவசியத்தையும், சுய தொழிலின் முக்கியவத்துவத்தையும் உணர்ந்து சமூகத்தில் தங்களுக்கென தனி அந்தஸ்தை பெற முயன்றனர்; முயன்றுகொண்டும் வருகின்றனர். அவ்வாறு உணர்ந்து சுயதொழில் முனைந்து சாதித்துக் காட்டிய திருவள்ளூர் மாவட்ட சாதனைப் பெண்களைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

The story of the Tiruvallur women working to gain status in the community

ஒரு குரோமோசோம் மாறிப் பிறந்த ஒற்றைக் காரணத்திற்காக உலகெங்கிலும் காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில், இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தில் மட்டும் மனம் உருக உருக வாழ்த்து தெரிவித்துவிட்டு, அடுத்த நாளே அடிமைப்படுத்த தயாராகும் இந்த ஆணாதிக்கச் சமூகம்.

ஆண்களின் கைகளைப் பார்க்காமல் அடிமைச் சங்கிலியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலரின் ஒற்றைக் கருதுகோளாக இருந்துள்ளது. ’உரிமையும் விடுதலையும் யாரிடம் கேட்டு பெறுவதில்லை; அது நாம் எடுத்துக்கொள்வது’ என்பதே பெண் சுதந்திரத்திற்கு மிக அவசியமான சிந்தனையாக முன்வைக்கப்பட்டது.

சீழ்படிந்த ஆணாதிக்கச் சமூகத்தில் முதல் கொடுமையாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், கல்வி அறிவைக் கொடுக்கும். அறிவைக் கொடுத்தால் பெண்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். சிந்தித்தால் ஆண்களை எதிர்த்துவிடுவார்கள் என்ற அச்சத்துடனே பெண்களை அடக்குவதற்கு ஆணாதிக்கச் சமூகம் கையிலெடுத்த முதல் ஆயுதம் கல்வி மறுப்பு. இதனை கனகச்சிதமாகச் செயல்படுத்தப்பட்டு, அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் அடக்கி ஆளப்படுகிறார்கள்.

இதுதவிர குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, கணவனை இழந்தால் உடன்கட்டை ஏறுதல், பெண்களை வேலைக்குச் செல்லவிடாமல் செய்தல் என்பன போன்ற எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்பட்டன. அந்தந்த காலகட்டத்தில் எழுந்த சீர்த்திருத்தவாதிகள் சிலர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்பி உடன்கட்டை ஏறுதல், தாசி முறை ஆகியவற்றை நீக்கச் செய்தும், பெண்கள் கல்வி கற்கும் வகையிலும் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கினர்.

சமூகத்தில் அந்தஸ்தைப் பெற உழைக்கும் திருவள்ளூர் பெண்களின் கதை

வாழ்நாள் முழுதும் சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்பட்ட தந்தை பெரியார் பெண் விடுதலைக்காக ஆற்றிய பணி இன்றியமையாத ஒன்று. அதேபோல பெண்கள் விடுதலை தனது கனவுகளில் ஒன்றாகக் கருதி தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் பெண்ணியக் கருத்துகளை பாரதியார் வெளிப்படுத்தினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தாசி முறையை ஒழித்தார்.

இதுபோன்ற சீர்த்திருத்தவாதிகள் ஆண்களால் ஒருபோதும் பெண்களுக்கு விடுதலை அளிக்க முடியாது என்ற சிந்தனையை பெண் சமூகத்தின் வேர் வரை பரப்பினார்கள். இவர்களின் சீரிய முயற்சியில் தன்னிச்சையாக பெண்கள் சிந்திக்கத் தொடங்கினர். தன்னெழுச்சியாக எழுந்த பெண்கள் சிலர் சமூகத்தின் பிடியிலிருந்து வெளிவந்தனர்.

உரிமைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற பெண்களும் கல்வியின் அவசியத்தையும், சுய தொழிலின் முக்கியவத்துவத்தையும் உணர்ந்து சமூகத்தில் தங்களுக்கென தனி அந்தஸ்தை பெற முயன்றனர்; முயன்றுகொண்டும் வருகின்றனர். அவ்வாறு உணர்ந்து சுயதொழில் முனைந்து, சாதித்துக் காட்டிய திருவள்ளூர் மாவட்ட சாதனைப் பெண்களைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பஞ்சாயத்து கூட்டமைப்புச் செயலாளரான அனிதா என்பவர் சொந்தமாக தொழில் தொடங்கி, அதன்மூலம் பெண்கள் பலரை ஊக்குவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்துள்ளார்.

அதன்படி, தன் கருத்தை ஒத்த 12 பெண்களை ஒருங்கிணைத்து அரசு சார்பில் நடத்தப்படும் சுயதொழில் பயிற்சிக்காக சமையல் கலை பயிற்சி கற்றுக்கொள்ள திருநின்றவூர் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதி பெண்கள் பாக்கு மட்டைத் தட்டுகள் செய்யும் தொழிலை ஆர்வத்துடன் மேற்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார்.

இதனைக் கண்ட அனிதாவுக்கு தாமும் இந்தத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டுள்ளது. தன்னுடைய விருப்பத்தை அவருடன் சென்ற பெண்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். அவர்களில் 5 பேர் மட்டுமே தொழில் செய்யலாம் என்று அனிதாவுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

எஞ்சிய ஏழு பேர் விருப்பம் காட்டாவில்லை. இருப்பினும், தன்னுடன் சேர்ந்த அந்த ஐந்து பேருடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளார் அனிதா. அதன்படி, பாக்கு மட்டைத் தொழிலில் பயிற்சி பெற்று, முதலீடுகள் குறித்து விசாரித்தபோது, சுமார் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாவிட்டாலும் முயற்சி செய்துகொண்டே இருந்த அவர், முதலீடுக்காகப் பல படிகள் ஏறி இறங்கியிருக்கிறார். இறுதியில், ஒரு தனியார் குளிர்பான தொழிற்சாலை நிறுவனம் அனிதாவின் குழுவினருக்கு 2 லட்சம் வரை பணம் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளது.

இதுபோக, பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அக்குழுவினருக்கு கிடைக்க, பாக்கு மட்டைத் தொழிலில் பக்காவாக இறங்கினர். முதலீடுகளை ஈர்த்த பின்னர், தொழில் செய்வதற்கு தேவையான இடம் கிடைக்காமல் போயுள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான், அண்மையில் நேமம் ஊராட்சி மன்றத்தலைவராகப் பதவியேற்ற பிரேம்நாத் அங்குள்ள மகளிர் சுய உதவி குழுக் கட்டடத்தைச் சீரமைத்து அக்குழுவினருக்கு வழங்கியுள்ளார். தற்போது ஐந்து பேருடன் பாக்கு மட்டைத் தொழில் தொடங்கி, அதனை வெற்றிகரமாக நடத்திவருகிறார் அனிதா.

இது குறித்து அனிதா கூறுகையில், ”பெண்கள் சுயதொழில் செய்து சொந்தக்காலில் நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு அரசுத் தரப்பில் பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மகளிருக்கான பஞ்சாயத்து குழு கூட்டமைப்பு போன்றவைகளின் பெண்கள் உறுப்பினராகி அதன்மூலம் சிறுதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம்.

நாங்கள் சமையல் கலை தொழில் பயிற்சிக்காக சென்றபோது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பனை ஓலைத்தட்டு, தென்னைகள் உள்ளிட்டவைகள் தயார் செய்யலாம் என்ற எண்ணம் எங்களுக்குள் வந்தது. அதன் விளைவாகவே அந்தத் தொழிலைத் தற்போது செய்துவருகிறோம்” என்றார்.

இதுதொடர்பாக ஊராட்சிமன்றத் தலைவர் பிரேம் நாத் கூறுகையில், “அனைத்துப் பெண்களும் பல விதமான தொழிலைக் கற்றுக்கொண்டு முன்னேறலாம். அதற்குப் பெரும் சிரத்தையோடு முயற்சி செய்தாலே போதுமானது. எளிதாக வெற்றிபெறலாம். நேமம் ஊராட்சியில் உள்ள பெண்கள் இதேபோல நிறைய வேலைகளைக் கற்றுக்கொண்டு கிராமத்தை முன்மாதிரியாக மாற்ற பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

”கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கு ஆண், பெண் பேதமில்லை என்பதால், இந்த வரிகளுக்கேற்றவாறு செயல்படும் நேமம் பெண்களை இந்த மகளிர் தினத்தில் நாமும் பாராட்டலாம்!

Last Updated : Mar 8, 2020, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.