தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி காவல் நிலைய பெண் காவலர் சசிகலா கரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே “தனியாரை தனித்து கல்லறை” என்ற விழிப்புணர்வு பாடலை பாடியிருந்த நிலையில், இரண்டாவது பாடலாக ''அண்ணன் தம்பியே, அன்பு அக்கா தங்கையே" எனும் கிராமப்புற வரிகளில் தெம்மாங்கு மெட்டில் கரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.
பெண் காவலர் பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு! - கரோனா விழிப்புணர்வு பாடல்
திருவள்ளூர்: மக்களிடம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த பெண் காவலர் ஒருவர் கரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கி உள்ளார்.