மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு தொடர்வண்டி நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை நடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்றவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அனுப்பம்பட்டைச் சேர்ந்த கார்த்திக், தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, தோட்டக்காடு மேட்டுக் காலணியைச் சேர்ந்த பூவரசன், பிரகாஷ்ராஜ், தாங்கல் பெரும்புலம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல பழவேற்காடு கடலோரப் பகுதியில் தோப்பில் பதுங்கி இருந்தும், முட்புதரில் மறைந்து கொண்டும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தமின் ஷா, பயாஸ், நந்தபாலன், சேக் தாவுத், பெருங்குளம் பூவா கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு ஆகியோரை திருப்பாலைவனம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சோழவரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரைச் சேர்ந்த உதயா, அழிஞ்சிவாக்கம் அத்திபேடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், தீபன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். உள்ளூர் காவல் துறையினர் அனுமதியோடு கஞ்சா விற்பனையில் சக்கைபோடு போட்டுவந்த இவர்களை, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை மேற்கொண்டது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சவப்பெட்டிக்குள் 300கிலோ கஞ்சா கடத்தல்
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை - மஃப்டியில் வந்து மடக்கிய போலீஸ்!