காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
காந்தி சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் படம் எடுத்த நிலையில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்டு அங்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பாம்பை அடிக்க முற்பட்ட போது, பாம்பு ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் பாம்பின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
உடம்பில் காயங்கள் ஏதுமின்றி படம் எடுத்த நிலையில் கிடந்த பாம்பால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அருங்காட்சியகம் உள்ளதால், அங்கிருந்து யாரேனும் இதைக் கொண்டு வந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: முழு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு!