திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அமைந்துள்ளதுஅருள்மிகுமுனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்டபெண்கள்முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பால்குடங்களை தலையில்சுமந்தவாறு பக்தி பெருக்குடன்அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து வருகிற24 ஆம் தேதியன்றுதீமிதி திருவிழாநடைபெறவுள்ளது. இதில் சுமார் 6ஆயிரம் பேர் காப்பு கட்டி விரதமிருந்து தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கவுள்ளனர்.
மேலும் இவ்விழா ஏற்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும்கோயில் அறங்காவலர் குழு மற்றும்விழாகுழுவினர் செய்து வருகின்றனர்.