ETV Bharat / state

டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற பள்ளியில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்! - teachers day celebration

திருவள்ளூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை அவர் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சுமதி
author img

By

Published : Sep 5, 2019, 7:34 AM IST

இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வகுப்பறை பாடம் தாண்டி வாழ்க்கை பாடத்தையும் மாணவர்களுக்கு புகட்டி அவர்களுக்கான வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இத்தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரின் முகமூடியை அணிந்து இத்தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆசிரியர் தின கொண்டாட்டம்

பள்ளி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த இப்பள்ளியின் தலைமைஆசிரியர் சுமதி, "அவர் படித்த பள்ளியிலே பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில் பள்ளியின் முன்னேற்றத்துக்கு அவர் வழிகாட்டியது போன்றே எங்களது பணியையும் அர்ப்பணிப்போடு செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது திருத்தணியில் அவர் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் முகமூடி அணிந்து வித்தியாசமான முறையில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது திருத்தணியில் அவர் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் முகமூடி அணிந்து வித்தியாசமான முறையில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி வெங்கடாபுரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது பால்ய பருவத்தில் கல்வி பயின்ற திருத்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் அனுசரிக்கப்பட்டது. ஒழுக்கம் ,பண்பு ,ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை ,விடாமுயற்சி, வாழ்க்கை ,பொது அறிவு, என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள் அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் செப்டம்பர் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளன்று கொண்டாடுகிறோம்.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை ஒழுக்கம் பண்பு ஆன்மீகம் பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக உன்னதப் பணியாகும் அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டுமே போதாது கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும் அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி வாழ்க்கை என்ற பாடத்தை கற்று தந்து ஒவ்வொரு மாணவர்களையும் சிறந்த மனிதர்கள் ஆக்குவது ஆசிரியர்கள்தான் அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும் அப்படிப்பட்ட அரும்பணியை திருத்தணியில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றன.

அவரது பிறந்தநாளை மாணவர்கள் நூதன முறையில் முகமூடி அணிந்து பள்ளி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆசிரியர்களை கொண்டாடினார்கள் சிறந்த மாணவர்களை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்று உருவாக்கிட தங்களது பணியை அர்ப்பணிப்போடு தொடர்ந்து செய்து வருகிறோம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பேட்டி

சுமதி தலைமையாசிரியர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.