Telangana Governor Tamilisai:திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதன் மூன்றாவது நாள் திருவழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் கேரள செண்டை மேள, தாளம் முழங்க தமிழிசை செளந்தரராஜனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அய்யா வைகுண்டர் தர்மபதி கோயில் நிர்வாகம் சார்பாக தமிழிசை, அவரது கணவர் செளந்தரராஜன் ஆகிய இருவருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டது. அதையடுத்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை தமிழிசை திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாமே: 'பதுக்கம்மா' விழாவை கொண்டாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை!