தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருந்த இந்த யாத்திரை திருச்செந்தூரில் டிசம்பர் 6ஆம் தேதி முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தகவலளித்த தமிழ்நாடு அரசு, கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தது.
இந்நிலையில் திருத்தணியில் பாஜக சார்பாக சுவரொட்டிகள், பேனர்கள், ராட்சத பலூன்கள் ஆகியவை அமைக்கப்பட்டு மாநிலத் தலைவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்றுவந்த நிலையில், கடைசி தருணத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, அக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை - நடிகர் விஜய்