ETV Bharat / state

மகனின் சைக்கிளை உழவு இயந்திரமாகப் பயன்படுத்திய விவசாயிக்கு உதவிய திமுகவினர்! - etvbharat

திருத்தணி அருகே வறுமையின் காரணமாக தனது மகனின் சைக்கிளையே உழவு இயந்திரமாக பயன்படுத்துவது குறித்து செய்தி வெளியானதையடுத்து, தமிழ்நாடு நிதி அமைச்சர் உத்தரவின்பேரில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைச் செயலாளர் சிறுவனுக்கு சைக்கிள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

மகனின் சைக்கிளை உழவு இயந்திரமாக பயன்படுத்திய விவசாயிக்கு உதவிய நிதி அமைச்சர்

author img

By

Published : Jul 8, 2021, 12:26 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த அசூர் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் சம்பங்கி பூ விவசாயம் பயிரிட்டு வருகின்றார்.

பெரும்பாலான விவசாயிகள் வறுமையில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி வரும் சூழலில், இவரும் வறுமையின் பிடியில் சிக்கி, உழவுப் பணிக்கு பயன்படுத்த இயந்திரங்கள் வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மகனின் சைக்கிளை உழவு இயந்திரமாக பயன்படுத்திய விவசாயிக்கு உதவிய திமுக நிர்வாகிகள்

இதனால் தனது மகன் தனஞ்செயன் (11) சைக்கிளையே உழவு இயந்திரமாக பயன்படுத்தி, அதனை தனது மகனை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு, உழவு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

11 வயது சிறுவனின் சைக்கிளைக் கொண்டு விவசாயம் செய்துவருவது குறித்து அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் மூலம் செய்தி பரவியது.

இதனையடுத்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜனின் உத்தரவின்பேரில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைச்செயலாளர் சி.எச். சேகர் சமீபத்தில் அசூர் கிராமத்திற்கு சென்று சிறுவனுக்கு சைக்கிளையும், அவரது குடும்பத்தாருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் வழங்கி கௌரவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.