திருவள்ளூர்: தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள் சிலம்பம் முக்கியமானது என்று அனைவரும் அறிந்த ஒன்று. சமீபகாலமாக இந்த கலையை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று (ஜூலை 25) புட்லூரில் உள்ள தனியார் மைதானத்தில் பீனிக்ஸ் புக் உலக சாதனை நிறுவனம் மற்றும் ஈட்டி கிளப் கலைக்கூடம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது.
2 மணி நேரம் சிலம்பம்
இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியின் போது அவர்கள் கண்களை கட்டிக்கொண்டு பானையின் மீது நின்று இரண்டு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். பொதுமக்கள், பார்வையாளர்கள் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
பீனிக்ஸ் புக் உலக சாதனை
சாதனை படைத்த 42 மாணவர்களும் பீனிக்ஸ் புக் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். அதற்காக சான்றிதழை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி வழங்கினார்.
இதையும் படிங்க: Tokyo Olympics: தமிழச்சி பவானி தேவி வெற்றி