திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் பி.ஜி.ஆர் மின்நிலைய உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 127 தொழிலாளர்களை கடந்த 6 மாதத்திற்கு முன் பணி நீக்கம் செய்து தொழிற்சாலையும் நிர்வாகம் மூடியது.
இதையடுத்து, தொழிற்சாலையை திறக்க வேண்டும், தங்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது சமைத்து உண்ணும் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை ஆறு மாதங்களாக நடத்தியும் உரிய தீர்வு காணப்படாததால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து இன்று மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், கோட்டாட்சியர், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின், கலைந்து சென்றனர்.