ETV Bharat / state

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை - பிசி கல்யாண் மாவட்ட எஸ்பி - திருவள்ளூர் தாலுகா காவல்நிலையத்தில் ஆய்வு

புதியதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிசி கல்யாண், திருவள்ளூர் தாலுகா காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கல்யாண் எஸ்பி
கல்யாண் எஸ்பி
author img

By

Published : Jun 21, 2022, 12:05 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய காவல் கண்காணிப்பாளராக பிசி கல்யாண் பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் அவர் முதன்முறையாக திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று (ஜூன் 20) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவல்நிலையத்தில் நீதிமன்ற ஆவணங்கள் பதிவேடு அறை, கைதி அறை, எழுத்தர் அறை உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் குற்றப் பதிவுகளை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி பிசி கல்யாண், காவல் நிலையத்தில் நடைபெறும் பணிகள், காவலர்களின் தேவையை அறிந்து கொள்ள ஆய்வு மேற்கொண்டதாக கூறினார்.

கல்யாண் எஸ்பி காவல்நிலையத்தில் ஆய்வு

இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மாற்று வழியில் கனரக வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி தேவையான இடங்களில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுமக்கள் நேரடியாக காவல்துறையிடம் புகார் அளிப்பதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்எல்ஏக்களுக்கு பேருந்துகளில் படுக்கை வசதி வழங்க அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.