திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கரையின் மீது வளர்ந்துள்ள முள்புதர்கள், செடிகள், குப்பைக் கழிவுகள் ஆகியவற்றை கடந்த 40 வாரமாக சமூகப் பணி குழுவினர், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சுத்தம் செய்துவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக குட் வேர்ல்ட் பப்ளிக் ஸ்கூல், ஆல்ஃபா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை இணைத்து இன்று (அக்.27) புழல் ஏரியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
புழல் ஏரி சுற்றுலாத் தலமாகும்வரை இப்பணி தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணிக்காக தொடர்ந்து ஆதரவளித்துவரும் பாடியநல்லூர் அரிமா சங்கம், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் சமூகப்பணி குழுவின் சார்பாக நன்றியும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.