ETV Bharat / state

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா தொற்று

திருவள்ளூர்: கரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நேரத்தில் தற்போது மீண்டும் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

author img

By

Published : May 2, 2020, 11:57 AM IST

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா தொற்று
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 53ஆக இருந்தது. இது தவிர வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 30 நபர்கள் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில நாள்களாக வைரஸ் தொற்று பரவாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஐந்து நபர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. தற்போது நிலவரப்படி ஆவடி நேசமணி நகரில் ஒருவரும், வசந்தம் நகரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சியில் பெரிய எடப்பாளையம் பகுதியில் இரண்டு நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 61 பேருக்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நபர்களில் 34 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊரடங்கால் சாலைகளில் சுதந்திரமாக நடமாடும் வனவிலங்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.