திருவள்ளூர்: மாவட்டம் அம்மனேரி கிராமத்தில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்காததைக் கண்டித்து பொதுமக்கள் வெளியேறினர்.
இதன் காரணமாக கிராம சபைக்கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், கிராம சபைக்கூட்டம் நடைபெற்றதாக, ஊராட்சி மன்றத் தலைவர் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் திருத்தணி சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!