திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூரைச்சேர்ந்த நவீன் என்பவரின் மனைவி தமிழரசி (22). திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக தமிழரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அது பொய்யான வதந்தி எனக் கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், திருவள்ளூர் கோட்டாட்சியர் வித்யா தலைமையில் விசாரணை நடத்தி, தற்கொலைக்குத் தூண்டிய நபர் மீது திருவள்ளூர் வட்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின் மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் சமரசம் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இதனால் சிறிது நேரம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: வால்பாறையில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு - கத்தியால் குத்திக் கொன்றதாக காதலன் வாக்குமூலம்