ETV Bharat / state

குளிக்க சென்ற இளைஞர் ஆற்றில் சடலமாக மீட்பு!

திருவள்ளூர்: கரிக்கலவாக்கம் கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.

author img

By

Published : Feb 22, 2021, 6:23 PM IST

Recovery
Recovery

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் கரிக்கலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் மணிகண்டன் (27). இவர் தனது நண்பர்களுடன் நேற்று (பிப்.21) கரிக்கலவாக்கம் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் குளிக்க சென்றுள்ளார். ஆற்றங்கரையில் இரண்டு பேர் இருக்க இரண்டு பேர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மணிகண்டன் நீண்டநேரமாகியும் கரைக்கு திரும்பாததால் நண்பர்கள் பதற்றமடைந்து ஊர்மக்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மணிகண்டனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

இளைஞர் சடலமாக மீட்பு

மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் இரவு நேரம் ஆனதால் திரும்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.22) காலை மணிகண்டனை தேடும் பணியை தீவிரப்படுத்த கோரி 200க்கும் மேற்பட்ட கரிக்கலவாக்கம் கிராம மக்கள் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு மணிகண்டனை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்ற உறுதியளித்ததன் பெயரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

பின்னர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் இன்று (பிப்.22) பிற்பகல் மணிகண்டனை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வடமாநில இளைஞருக்கு தூக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.