ETV Bharat / state

‘விரைவில் 100 % தடுப்பூசி போடப்படும்’ - ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் இதுவரை 4.79 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த எண்ணிக்கை 100 விழுக்காட்டை எட்டும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

radhakrishnan  vaccination camp  radhakrishnan inspect vaccination camp  thiruvallur news  thiruvallur latest news  vaccination  corona vaccine  தடுப்பூசி  கரோனா தடுப்பூசி  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  ராதாகிருஷ்ணன்  தடுப்பூசி முகாம்  திருவள்ளூரில் தடுப்பூசி முகாமை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்
ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Oct 3, 2021, 5:11 PM IST

சென்னை: கரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக கடந்த நான்கு வாரங்களாக இலக்கு நிர்ணயித்து சிறப்பு தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு வருகின்றன. இதனால் இதுவரை 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்

விரைவில் 100 விழுக்காடு தடுப்பூசி

தொடர்ந்து ராதாகிருஷ்ணன் பேசுகையில், “திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு முகாமை ஆய்வு செய்தது மிகவும் திருப்திகரமாக உள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 760 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த சிறப்பு முகாம்களுக்கு கிராமப்புறங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் அரசு மூலம் 4.54 கோடி தடுப்பூசியும், தனியார் மூலம் 25 லட்சம் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 4.75 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அதில் முதியவர்களுக்கு முதல் டோஸ் 42 விழுக்காடும், இரண்டாவது டோஸ் 18 விழுக்காடும் போடப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் தடுப்பூசி 100 விழுக்காடு நிறைவு பெறும். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி ஆகியவற்றை ஒழித்து மகிழ்ச்சியாக வாழலாம்” என்றார்.

இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குநர் ஜவகர், நகராட்சி ஆணையர் சந்தானம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.