திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் கிராமம் சடை அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (54). இவர் தனது மகன்கள் கார்த்திக், அன்பு ஆகியோருடன் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அதிகாலை 4 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் மீது தவறி விழுந்து அடிபட்ட ராமகிருஷ்ணன், தண்ணீரில் விழுந்துள்ளார். இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு மகன்கள் கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்தார்.
பின்னர் இதுகுறித்து திருப்பாலைவனம் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
'ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலி கட்ட முயன்ற இளைஞர்' - அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!