ETV Bharat / state

ரூ.1.37 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்: அமைச்சரிடம் தனியார் நிறுவனம் ஒப்படைப்பு - பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர்

கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.1.37 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை அமைச்சர் நாசரிடம் தனியார் நிறுவனத்தினர் ஒப்படைத்தனர்.

பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர், சாமு நாசர்
அமைச்சரிடம் தனியார் நிறுவனம் ஒப்படைப்பு
author img

By

Published : Jun 8, 2021, 9:59 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை தினசரி தொற்றின் எண்ணிக்கை 1500க்கும் மேல் இருந்தது. மேலும், தினமும் 20க்கும் மேற்பட்டோர் தொற்றால் பலியாகி வந்தனர். இதற்கிடையில், தமிழ்நாடு அரசின் துரிதப்பணிகளால் தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

பாதியாக குறைவு

மேலும், தற்போது தினசரி 400க்குக் கீழாக தொற்றின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், கட்டில், மெத்தை உள்ளிட்டப் பொருள்களை தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர்.

சமூக பங்களிப்பு நிதி

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், தொடுகாட்டில் இயங்கி வரும் "மோபிஸ் இந்தியா பவுண்டேஷன்" என்ற நிறுவனம், தனது சமூக பங்களிப்பு நிதியின்கீழ் ரூ.1.37 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்களை தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்கு வழங்க முன் வந்தது. இதனை வழங்கும் நிகழ்ச்சி ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று (ஜுன் 7) நடந்தது.

இதில், 30ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஐந்து ஈ.ஜி.சி இயந்திரம், இரண்டு நடமாடும் எக்ஸ்ரே இயந்திரம், ஐந்து நாசி வழியாக ஆக்ஸிஜன் செலுத்தும் கருவிகள், 600 இரும்புக் கட்டில்கள், 600 மெத்தைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு நாசர், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோரிடம் தனியார் நிறுவன அலுவலர்கள் வழங்கினர்.

மேலும், இந்த உபகரணங்களை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகம் பிரித்து அனுப்பும் என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் 37 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.