வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக,விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில், அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர், எம்ஜிஆர் வேடமணிந்தவரை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, எம்ஜிஆர் வேடமணிந்தவரிடம் அங்கிருந்த வேட்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இவ்வளவு கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தனது கணவர் பார்த்திபனுடன் கர்ப்பிணி மோனிகா என்பவர் மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் ராகேஷ் 11ஆவது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: நான் ரொம்ப நல்லவன்: வேஷமிட்டவர்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்...!