திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேவுள்ள பெரியகுப்பம் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஊழியர் இன்று (ஜூன் 01) காலை வழக்கம்போல் கடையை திறக்கவந்தார். அப்போது கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்ற பார்த்தபோது கடையில் இருந்த ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் திருடுபோகியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் இது குறித்து மாவட்ட மதுவிலக்கு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருடு போன இடத்திற்கு யாரும் வரவில்லை.
இதையடுத்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கடையை ஆய்வு செய்தனர். கடையில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV: விநாயகர் கோயில் உண்டியலை திருடிய நபர்களால் பரபரப்பு!