திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் சிறுனியம் பலராமன் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 89ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஊராட்சியில் சுமார் 200 மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு சமபந்தி போஜனத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக மாணவர்களுக்கு இலவசமாக விளையாட்டுப் பொருள்களையும் எம்.எல்.ஏ சிறுனியம் பலராமன் வழங்கினார்.