ETV Bharat / state

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பாமக நிர்வாகி - thiruvallur district news

திருவள்ளூர்: வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி நன்றி தெரிவித்துள்ளார்.

பாமக
PMK
author img

By

Published : Mar 2, 2021, 11:30 AM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் தலைமையில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு உள் இடஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நடந்த சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பிப்ரவரி 28ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி

இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டியளித்த பாமக மாநில துணை பொது செயலாளர் பாலா (எ) பாலயோகி, ’பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்த முதலமைச்சருக்கு நன்றி’ என்றார்.

இதையும் படிங்க:விஸ்வகர்மா சமூகம் அதிமுகவுக்கு ஆதரவு- கரூரில் கூட்டமைப்பு தலைவர் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.