பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் அதனை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடல் (பரிக்ஷா பே சார்ச்சா) நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தல்கோதரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 66 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 1,050 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியின் உரை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பார்க்கும் விதமாகவும் ஒளிபரப்பப்பட்டது.
அதன் ஒருபகுதியாக திருவள்ளூர் ஆர்.எம். ஜெயின் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் உரையாடுவதைப் பார்க்க பிரத்யேக காணொளி அறை அமைக்கப்பட்டிருந்தது. பிரதமரின் உரையைக் கேட்க அமர்ந்திருந்த மாணவர்கள், அவர் இந்தியில் பேசியதால் ஒன்றும் புரியாமல் தவித்தனர்.
இதையும் படிங்க: கொல்கத்தா கால்பந்து மைதானத்தில் சிஏஏவுக்கு எதிராக வலுப்பெற்ற போராட்டம்