ETV Bharat / state

அலட்சியம் காட்டும் பேரூராட்சி நிர்வாகம்; அழிவின் விளிம்பில் குளங்கள்! - peral area pools aggression

திருவாரூர்: பேரளம் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து காட்டும் அலட்சியத்தால், சாக்கடையாக மாறி வரும் குளங்களை விரைந்து மீட்டெடுக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அழிவின் விளிம்பில் குளங்கள்!
அழிவின் விளிம்பில் குளங்கள்!
author img

By

Published : Nov 29, 2020, 1:25 PM IST

திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்கு சொந்தமாக 16- குளங்கள் இருந்து வந்த நிலையில் பல்வேறு தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளால் தற்போது 11 குளங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் சாக்கடை கழிவுகள் கலந்து குட்டைகளாக மாறியுள்ளன.

தூர்வாராமல் கிடக்கும் குளம்!
தூர்வாராமல் கிடக்கும் குளம்!

பேரளம் பேரூராட்சியில் பணியாற்றி வரும் செயல் அலுவலர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டதின் விளைவாக 11- குளங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என சமூக ஆர்வலர்களும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பேரளம் பேரூராட்சி

12 வார்டுகளில் பேரூராட்சி சொந்தமாக திருக்குளம் ,ரெண்டர் குளம், தேரடிகுளம், மாரியம்மன் குளம் உள்ளிட்ட 16-குளங்கள் உள்ளன. ஒவ்வொரு குளமும் சுமார் 2 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவை கொண்டது. மேட்டூர் தண்ணீர் வராத நேரங்களில் இந்த குளங்களின் தண்ணீர்தான் விவசாயத்திற்கு ஆதாரம்.

தூர்வாராமல் கிடக்கும் குளம்!
தூர்வாராமல் கிடக்கும் குளம்!

தற்போது இந்தக் குளங்கள் அனைத்தும் பேரூராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் செயல் அலுவலர்களின் அலட்சியப் போக்கால் சாக்கடைகளாக மாறிவிட்டன என குற்றஞ்சாட்டுகிறார் விவசாயி வீரமணி.

தற்போது குப்பைக் கூளமான 11 குளங்களைத் தவிர்த்து மீதமுள்ள ஐந்து குளங்களும் சில நாட்களில் ஆக்கிரமிக்கப்பட்டு மறைந்து விடுமோ என அச்சம் இருப்பதாக சமூக ஆர்வலர் ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு பேரளம் பகுதியின் நடுவில் அமைந்துள்ள திருக்குளம் வழக்கில் இருப்பதாக காரணம் காட்டி மற்ற குளங்களை பற்றிய தகவல்களை தருவதற்கு மறுத்து வருவதாக விவசாயி வீரமணி வேதனை தெரிவிக்கிறார்.

அழிவின் விளிம்பில் குளங்கள்!

நீர்நிலைகளின் பாதுகாப்பையும், விவசாயிகளின் நலனையும் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்து இடங்களையும் அகற்றி மீண்டும் பழைய அளவிற்கு தூர்வாரி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ’ரஜினியின் முடிவை மக்கள் வரவேற்பார்கள்’: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.