திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்பு குளம் வெட்டுக்காடு கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமானை வெறி நாய்கள் சுற்றிவளைத்து கடித்தன.
மானின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், கற்களை வீசி வெறி நாய்களை விரட்டியடித்தனர். இதன்பின்னர் காலில் காயமடைந்த மானை மீட்டு, அதற்குத் தண்ணீர் கொடுத்தனர். தொடர்ந்து சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்எம் ரவி அளித்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த மாதர்பாக்கம் வனச்சரக அலுவலர் சுரேஷ்பாபு காயங்களுடன் இருந்த மானை மீட்டார்.
சிகிச்சைக்குப் பின்னர் வனப்பகுதியில் மான் விடப்படும் என்று வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூசாரி வீட்டில் இருந்து 4 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: 4 பேர் கைது