திருவள்ளூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்த கனமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீரானது தேங்கி நின்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அருகே உள்ள புதுமாவிலங்கை பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி பாய்ந்தோடி வருகிறது.
இந்த அணைக்கட்டில் சிறுவர்கள் தண்ணீரில் குளித்து விளையாடி வருகின்றனர். அணைக்கட்டைச் சுற்றியுள்ள கிராமங்களான அகரம், பிஞ்சிவாக்கம், கடம்பத்தூர், கண்டிகை, சித்திரை போன்ற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அணைக்கட்டில் இருந்து நீர் வழிவதை பொழுதுபோக்காக பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மக்களிடம் கேட்கும்போது, இக்காட்சியைப் பார்க்கும் போது குற்றால அருவியைக் காண்பது போல இருக்கிறது என்றும்; தங்கள் பகுதியில் அமைந்துள்ள இத்தகைய சூழல் மிகவும் அருமையானதாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: குளுகுளு சென்னை: அதிகளவிலான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி