ETV Bharat / state

'அரசின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம்'

author img

By

Published : Jan 23, 2020, 12:29 PM IST

திருவள்ளூர்: அரியலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.

union meeting
union meeting

ஒன்பது ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. பல்வேறு தடைகளை மீறி நடைபெற்ற இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட திமுக அதிக இடங்களைப் பிடித்தது.

கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பிடித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர், அரியலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்து, கையேடுகளையும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ' கிராமத்தின் வளர்ச்சியை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். கிராமங்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், சாலை வசதி இவை மூன்றும் உங்கள் பொறுப்பில் உள்ளது' என்பதை எடுத்துரைத்தனர்.

ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு

மேலும், 'அரசின் திட்டங்களை முறையாக மக்களிடத்தில் சென்று சேர்ப்பதில் உங்கள் பங்கு மிக முக்கியமானது. அனைவரும் அதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்' என்றும் ஆட்சியர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:

வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் - ஊஹான் நகருக்கு போக்குவரத்து நிறுத்திவைப்பு

Intro:அரியலூர் - ஊராட்சி தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி முகாம்Body:அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 201 கிராம ஊராட்சிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாம் அரியலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமிற்கு அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் பொருட்டு, அரசியலமைப்பு ஆணைகள் அவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான நிர்வாகம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து அறியவும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகின்றது.Conclusion:இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனரீ

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.