ETV Bharat / state

கடன் தொல்லையால் ஹார்ட்வேர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி: கடன் தொல்லையால் ஹார்ட்வேர் உரிமையாளர், தனது கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் தொல்லையால் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
கடன் தொல்லையால் ஹார்ட்வேர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
author img

By

Published : Apr 19, 2021, 9:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பார்த்தப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(45). இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் அந்தப் பகுதியில் ஹார்ட்வேர் கடை ஒன்றை நடத்தி வந்தார். வழக்கம்போல் நேற்று (ஏப். 18) கடையை மூடி விட்டு வீடு திரும்பிய ரமேஷ், இன்று ( ஏப். 19) அதிகாலை 5 மணிக்கு கடையை திறப்பதாக மனைவி அனிதாவிடம் கூறி வீட்டிலிருந்து கிளமியுள்ளார்.

இதையடுத்து, தனக்கு சொந்தமான ஹார்டுவேர் கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் ரமேஷ் காணப்பட்டார். இதுகுறித்து, சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், ரமேஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரமேஷ் கடன் பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இமயமலை உப்பில் இவ்வளவு நன்மைகளா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.