ETV Bharat / state

'எந்தக் காய்கறி எடுத்தாலும் கிலோ 10 ரூபாய்'

திருவள்ளூர்: ஊடரங்கு உத்தரவு காரணமாக உணவுப் பொருட்கள், காய்கறிகள் விலையேறியுள்ள வேளையில், தன்னார்வலர் ஒருவர் அனைத்து விதமான காய்கறிகளையும் 1 கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனை செய்வது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'எந்த காய்கறி எடுத்தாலும் கிலோ 10 ரூபாய்'

author img

By

Published : Apr 13, 2020, 7:16 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்கெட்டிற்கு பெரும்பாலான காய்கறிகள் கோயம்பேடு மார்கெட்டில் இருந்துதான் வருகிறது. அங்குள்ள ஏஜென்டுகள் மூலம் இந்தக் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. ஊரடங்கு உத்தரவால் இந்தக் காய்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து லாரிகளில் கொண்டு வர இயலாத நிலை இருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

'எந்தக் காய்கறி எடுத்தாலும் கிலோ 10 ரூபாய்'

இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் தன்னார்வலர் பாலாஜி என்பவர் விலை உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்களின் கஷ்டங்களைக் குறைக்கும் விதமாக கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், முட்டை கோஸ், மாங்காய், உருளைக் கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை கிலோ 10 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: கடலுக்கு செல்லப்போவதில்லை- திருவள்ளூர் மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.