ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவை மீறி கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயக்கம் - கார் உதரி பாகங்கள் தொழிற்சாலையில் ஊழியர்கள் வெளியேற்றம்

திருவள்ளூர்: மத்திய மாநில அரசுகளின் மக்கள் ஊடரங்கு உத்தரவை மீறி மப்பேடு அருகே கார் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்குவதாக வந்த புகாரையடுத்து விரைந்து வந்த வருவாய்த்துறையினர் ஊழியர்களை வெளியேற்றி கதவுக்கு பூட்டு போட்டனர்.

Thiruvallur district corona update
workers recovered from car spare parts factory in thiruvallur district
author img

By

Published : Mar 23, 2020, 7:50 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதலில் தற்காத்துக்கொள்ளும் விதமாக மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் இந்த மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழ்ச்சேரியில் உள்ள தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வேலை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.

அந்தப் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில், மப்பேடு வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தொழிற்சாலைக்குள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தொழிற்சாலைக்குள் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணியில் இருந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை அவர்கள் வெளியேற்றினர்.

workers recovered from car spare parts factory in thiruvallur district

எந்த மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றுவது ஏன் என்பது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். பின்னர் அலுவலர்கள் அவர்களை எச்சரித்தனர்.

தொழிற்சாலையின் காவலாளியை மட்டும் அங்கு இருக்கச் செய்துவிட்டு, தொழிற்சாலைக்கு பூட்டு போட்டு வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் கீழச்சேரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: மக்களுக்குச் சேவை செய்தவர்களுக்கு கைதட்டி பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.