திருவள்ளூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், உணவுக்கு கஷ்டப்பட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு சென்று, காவல் துறையினர் கணக்கெடுப்பு நடத்திவருகின்றனர். இம்மாவட்டத்தில் ஒடிசா, பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி வேலை செய்கின்றனர். இதில்
- திருவள்ளூரில் :7367
- திருத்தணி : 3914
- ஊத்துக்கோட்டை : 26
- பூந்தமல்லி : 2,542
- பள்ளிப்பட்டு : 1,690
- ஆர்.கே.பேட்டை : 1,372
- ஆவடி : 5,214 என மொத்தம் 24,393 பேர் தங்கியிருந்து, தொழிற்சாலை, கடைகள், செங்கல்சூளைகளில் பணிபுரிந்துவந்தனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவர்கள் அனைவரும் வேலையின்றி, தங்கியிருந்த குடியிருப்புகளில், வசித்துவருகின்றனர். அவர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மூலம், அரிசி, மளிகை, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வடமாநில தொழிலாளர் அனைவரும், தங்களது மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தும், பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ஒரு சிலர், தங்களது மாநிலங்களுக்கு செல்ல முயற்சித்துவருகின்றனர். இதையடுத்து, காவல்துறையினர், வடமாநில தொழிலாளர் தங்கியுள்ள பகுதிகளுக்குச் சென்று, பட்டியலை வைத்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...ஊதியம் கொடுத்த சான்றிதழ்களை தனியார் கல்லூரி சமர்ப்பிக்க முதலமைச்சருக்கு மனு