ETV Bharat / state

கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்ட 6ஆவது புதிய போர்க்கப்பல்! - An OBV-6 frigate belonging to the Coast Guard has been added to the port of LNT

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி எல்.என்.டி. கப்பல் கட்டும் துறைமுகத்தில் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான மேலும் ஒரு ஓ பி வி-6 எனப்படும் போர்க்கப்பல் சேர்க்கப்பட்டது. இதனை மத்திய கப்பல் (தனிப்பொறுப்புடன் கூடிய), ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்.

கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்ட ஆறாவது புதிய போர்கப்பல்

author img

By

Published : Feb 27, 2020, 7:52 PM IST

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல்என்டி தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளது. பாதுகாப்பு அமைச்சகமும் எல்என்டி நிறுவனமும் இக்கப்பல் தலத்தில் கடலோரக் காவல்படைக்கு ஏழு அதிநவீன ரோந்து கப்பல்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி விக்ரம், வீரா, விஜயா, வராஹ எனப் பெயரிடப்பட்ட நான்கு ரோந்து கப்பல்கள் கடலோரக் காவல் பணியில் இணைக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றது. ஐந்தாவது கப்பலான வராட் என்னும் பெயரிட்ட கப்பல் நாளை கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட உள்ளது.

ஆறாவது கப்பல் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அக்கப்பலைக் கடலில் இறக்கும் நிகழ்ச்சி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கப்பல் (தனிப்பொறுப்புடன் கூடிய), ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா, அவரின் மனைவி கீதா மாண்டவியா அறிமுகப்படுத்தினர்.

கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்ட ஆறாவது புதிய போர்கப்பல்.

இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படைத் தலைமை இயக்குநர் கே. நடராஜன், கடலோரக் காவல் படை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கப்பலில் 14 அலுவலர்கள் 88 வீரர்கள் என மொத்தம் 102 பேர் பணியில் இருப்பார்கள். இந்தக் கப்பல் 2500 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது, கரைக்குத் திரும்பாமலேயே சுமார் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு அதிநவீன கட்டமைப்பு வசதிகள், அதி நவீன ரக துப்பாக்கிகள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்கப்பலில் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இரண்டு இந்திரங்களைக் கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசு கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை இக்கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.