ETV Bharat / state

திருவள்ளூர் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

author img

By

Published : Jul 28, 2022, 6:18 PM IST

திருவள்ளூரில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அப்பள்ளியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், மாணவியின் உறவினர்களிடமும் விசாரணை நடந்து முடிந்தது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 25ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் ப்ரியங் கனுங்கோ தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விடுதியில் விசாரணை நடத்தினர்.

மேலும் விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பின் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகேவுள்ள விருந்தினர் மாளிகையில் மாணவியின் தாயார், அண்ணன், அண்ணி, சித்தி ஆகியோரிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத் தலைவர், “மாணவியின் இறப்பு குறித்து இன்று (ஜூலை 28) காலை பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டோம். பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டோம்.

இது சம்பந்தமாக ஏற்கெனவே விசாரணை செய்த மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சிபிசிஐடி அலுவலர்கள் உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் குழு ஆகியோரிடமும் மாணவியின் இறப்பு குறித்த தகவல்களைச்சேகரித்துள்ளோம். மாணவியின் உறவினர்களிடமும் இறப்பு சம்பந்தமான சந்தேகங்களையும் கேட்டறிந்தோம்.

விடுதியில் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது” என்றார். மேலும், இது சம்பந்தமான முழு அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை; மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.