திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டியில் பூவிருந்தவல்லி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தொகுதி மக்களவை வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தேர்தல் பரப்புரையின்போது அவர் பேசியதாவது, மோடி ஆட்சியை கணக்கு பார்த்து வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. வாக்காளர்களே காந்தி இந்தியா வேண்டுமா, கோட்சே இந்தியா வேண்டுமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள். மேக் இன் இந்தியா என்று வாய்க்கிழிய பேசும் மோடி பட்டேல் சிலையை மேடின் சைனாவில் தயாரித்தது ஏன்?
மோடி என்னும் கேடியால் சமூகநீதி தத்துவத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் அனிதா போன்றவர்கள் டாக்டர் ஆக முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் வாக்களித்தால் நீட் தேர்வை ரத்து செய்ய ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்து விட்டார். அதற்காக வாக்களியுங்கள். என அவர் தெரிவித்தார் .