திருவள்ளூரில் கருமாரியம்மன், வேதபுரீஸ்வரர் ஆகிய இரு பிரசித்திப் பெற்ற கோயில்களும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பேருந்து நிலையம், கோயில் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதோடு, பொதுமக்கள் கைகளை கழுவி சுத்தமாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி ஊழியர்கள் முகம், உடல் கவசத்துடன் இருச்சக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க... சென்னையில் 432 பயணிகள் தொடர் கண்காணிப்பு